திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மகனும் நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் அரசியல் வர ஆர்வம் உள்ளதாக தெரிவித்தார். மேலும், திமுக இதற்கு வாய்ப்பளித்தால் முழுமுச்சில் செயல்பட தயாராகவுள்ளதாக தெரிவித்தார்.
இந்நிலையில், சென்னையை அடுத்த தாம்பரத்தில் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து திமுக சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் தொண்டர்களுடன் தொண்டர்களாக கட்சி கொடியை கையில் ஏந்தியவாறு அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார். சேப்பாக்கத்தில் நடைபெறும் போராட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.