அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆருக்கு தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் சிலைகள் உள்ளன. இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள அவரது சிலைக்கு சிலர் காவித்துண்டு அணிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
எனவே இதனை விமர்சித்து உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் சிலை அவமதிப்பு குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எவ்வித கருத்தும் இல்லையா அல்லது பதிலளிக்க நோட்டாஜியிடமிருந்து க்ரீன் சிக்னல் கிடைக்கவில்லையா? அம்மா மரண மர்மத்தையே மறந்துட்டோம். இதெல்லாம் எதற்கு? என நினைத்திருக்கலாம்? தற்போது இவருக்கு நிறுவனரைவிட உள்வாடகைக்கு எடுத்திருப்பவரே முக்கியம் என பதிவிட்டுள்ளார்.