”தளபதி உதயநிதி ஸ்டாலின்” கழகத்தின் வாய்மொழி உத்தரவு!!

செவ்வாய், 23 ஜூலை 2019 (11:24 IST)
திமுக இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலினை இனி தளபதி என அழைக்க வேண்டும் என உத்தரவு வந்துள்ளதாம். 
 
முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி மறைந்த பிறகு, திமுகவின் தலைவராக கருணாநிதியின் மகன் ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து ஸ்டாலின் வகித்து வந்த இளைஞர் அணி செயலாளர் பதவி ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு கொடுக்கப்பட்டது. 
 
ஸ்டாலின் தலைவராக பதவி ஏற்கும் போது வெளியாட்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் கட்சிக்குள் இருப்பவர்கல் யாரும் இதை எதிர்க்கவில்லை. ஆனால், உதயநிதி பதவி ஏற்ற போது கட்சிக்குள்ளேயே சிலர் விமர்சித்தனர். 
இந்நிலையில், பதவி வழங்கப்பட்டும் உதயநிதியை பலரும் பெயர் சொல்லியே அழைக்கிறார்களாம். இது நெருடலாக இருப்பதாக குடும்பத்தினர் கூற உதயநிதியை இனி தளபதி என அழைக்க வேண்டும் என கழகத்தின் சார்பில் வாய்மொழி உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளதாம். 
 
அதாவது கருணாநிதியை கலைஞர் என அழைத்தது போல, திமுக பொது செயலாளர் அன்பழகனை இனமானப் பேராசிரியர் என அழைப்பது போல இனி ஸ்டாலினை தலைவர் என்றும், உதயநிதியை தளபதி என்றும் அழைக்க வேண்டும். அதேபோல் பேனர், போஸ்டர் ஆகியவற்றிலும் அவ்வாறே குறிப்பிட வேண்டும் என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்