"மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் - கலைஞானி கமல்ஹாசன் சாரை இன்று அவருடைய இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். அன்போடு வரவேற்று, அரசியல், கலை உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பாக கருத்துக்களை பரிமாறிக்கொண்ட கமல் சாருக்கு என் அன்பும், நன்றியும்."
ஏற்கனவே, இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று கமல்ஹாசனை சந்தித்து பேசினார். மேலும், திமுக சார்பில் கமல்ஹாசன் மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியது. 2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடரும் என்றும் கூறப்படுகிறது.