கார் விபத்து: நெல்லை இருட்டு கடை அல்வா உரிமையாளர் மகள் மரணம்

வியாழன், 30 மார்ச் 2017 (12:58 IST)
வத்தலகுண்டு அருகே கார் விபத்தில் திருநெல்வேலி இருட்டு கடை அல்வா உரிமையாளர் மகள் உள்பட இருவர் பலியாகினர்.


 

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஹரிபிரசாத். இவரது மனைவி இந்துராணி. இவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பெங்களூருவிலிருந்து கேரளத்திற்கு காரில் வந்தனர். காரை ஹரி பிரசாத் ஓட்டினார். வத்தலகுண்டு அருகே வந்தபோது கார் டயர் வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகே இருந்த மரம் மீது வேகமாக மோதியது. இதில் இந்துராணியின் அம்மா மோகனா, இளைய மகள் தனிஷ்கா ஸ்ரீ ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

படுகாயம் அடைந்த ஹரிபிரசாத், அவரது மனைவி இந்துராணி முத்த மகள் அஞ்சனா ஆகியோர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் பலியான மோகனா நெல்லையில் புகழ்பெற்ற இருட்டு கடை அல்வா உரிமையாளரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்