தமிழ்நாட்டின் நெருக்கடிக்கு அந்த இரண்டு அமைச்சர்கள்தான் காரணம்: சுப்பிரமணிய சாமி

புதன், 15 பிப்ரவரி 2017 (02:43 IST)
தமிழ்நாட்டில் நடந்த தற்போதைய நெருக்கடிக்கு காரணம் இரண்டு மத்திய அமைச்சர்கள்தான். சரியான நேரம் வரும்போது அவர்கள் யார் என்பதை கூறுகிறேன் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார்.


 

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்பட நான்கு பேர்களும் குற்றவாளிகள் என உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியது. மேலும், சசிகலா, இளவரசி, தினகரன் ஆகியோர் சரண அடைய வேண்டும் என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை அளித்துள்ளது.

இந்த தீர்ப்பு வெளியான அடுத்த நிமிடம் சசிகலா ஆதரவாளர்கள் சோகத்திலும், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியிலும் திளைத்தனர். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஒரு படி மேலே போய் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.

சசிகலா சிறைக்கு செல்ல இருப்பதால், யார் ஆட்சி அமைக்கப்போகிறார்கள்? யார் முதலமைச்சர் பதவியை ஏற்க போகிறார்கள் என்ற தெளிவான நிலை எதுவும் தமிழகத்தில் இல்லை.

இந்நிலையில் இது குறித்து கூறியுள்ள பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி, “தமிழ்நாட்டில் நடந்த தற்போதைய நெருக்கடிக்கு காரணம் இரண்டு மத்திய அமைச்சர்கள்தான். சரியான நேரம் வரும்போது அவர்கள் யார் என்பதை கூறுகிறேன்.

சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படும் என்று நான் எதிர்பார்த்திருந்தேன். இந்த நான்கு ஆண்டு தண்டனையிலிருந்து சசிகலா தப்பிக்க முடியுமென்று நான் நினைக்கவில்லை” என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்