ஓ.பன்னீர்செல்வம் அணி சசிகலாவிடம் இருந்து அதிமுக கட்சியை கைப்பற்ற தொடர்ந்து போராடி வருகிறது. ஓ.பி.எஸ் அணி 12 எம்.பி.க்கள், 11 எம்.எல்.ஏ.க்கள் என குறைந்த எண்ணிக்கை உடைய அணியாக உள்ளது. இருந்தும் அதிமுக மூத்த நிர்வாகிகள் அனைவரும் ஓ.பி.எஸ் அணியில்தான் உள்ளனர்.
தற்போது இரண்டு முக்கிய நிர்வாகிகள் ஓ.பி.எஸ். அணியில் இருந்து விலகியுள்ளனர். நெல்லை மாவட்டம், செங்கோட்டை ஒன்றியச் செயலாளர் செல்லப்பா மற்றும் கடையநல்லூர் தொகுதி பொதுக்குழு உறுப்பினர் ஹனீஸ் ஆகியோர் இன்று துணைப் பொது செயலாளர் டிடிவி தினகரன் முன்னிலையில் இணைந்தனர்.