மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேலும் 2 லட்சம் பேர் சேர்ப்பு.. விண்ணப்பங்கள் பரிசீலனை

Siva

வெள்ளி, 5 ஜனவரி 2024 (13:39 IST)
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேலும் 2 லட்சம் பேர் சேர்க்கப்பட்டு இருப்பதாகவும், இவர்களுக்கு வரும் 10ம் தேதி முதல் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட உள்ளது என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
 
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் சேர 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், அதில் தற்போது 2 லட்சம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
1.13 கோடி பேருக்கு கடந்த மாதம் உரிமைத்தொகை வழங்கப்பட்ட நிலையில், இம்மாதம் முதல் பயனாளிகளின் எண்ணிக்கை 1.15 கோடியாக அதிகரித்துள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது
 
 கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெற வேண்டிய பல பயனாளிகளின் பெயர்கள் விடுபட்டு உள்ளது என்று அதிருப்தி ஏற்பட்ட நிலையில் தற்போது மீண்டும் 2லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது மகளிர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்