அரசு ஊழியர்களுக்காக இரண்டு முக்கிய அரசாணை வெளியீடு!

வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (07:33 IST)
அரசு ஊழியர்களுக்காக பல்வேறு சலுகைகளை திமுக அரசு செய்து வருகிறது என்பதும் இதனால் அரசு ஊழியர்கள் மிகவும் மகிழ்ச்சியாக பணி செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் தற்போது அரசு ஊழியர்களுக்கான இரண்டு முக்கிய அரசாணைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
 
இதன்படி அரசு பணிகளில் நேரடி நியமனம் செய்யப்படுபவர்களுக்கான வயது உச்சவரம்பு மேலும் 2 ஆண்டுகள் உயர்த்தி அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி அரசுப் பணிகளில் நேரடி நியமனம் மூலம் பணி நியமனம் செய்யப்படுவதற்கான வயது வரம்பு 30-ல் இருந்து 32 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
 
அதேபோல் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதினை 60 ஆக உயர்த்தி திருத்தப்பட்ட அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அரசாணையின் படி, அரசு ஊழியர்கள் 60 வயதை அடைந்த அடுத்த நாளே ஓய்வூதியதாரர்கள் ஆக கருதப்படுவர்கள்.
 
இந்த இரண்டு அரசாணைகளும் உடனடியாக அமலுக்கு வருகிறது என்பது அரசு ஊழியர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய சலுகையாக பார்க்கப்படுகிறது.
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்