அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் 2 பேர் பரிதாப பலி: சென்னையில் சோகம்!

சனி, 10 டிசம்பர் 2022 (13:21 IST)
சென்னையில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .
 
சென்னையில் நேற்று மான்டஸ் புயல் கரையை கடந்ததை அடுத்து பல மரங்கள் வேரோடு சாய்ந்தாகவும் ஒருசில மின் கம்பங்களும் விழுந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வேரோடு விழுந்த மரங்களையும் மின்கம்பங்களையும் சீரமைக்கும் பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் விடிய விடிய ஈடுபட்டு வருகிறார்கள். 
 
தற்போது சென்னை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் சென்னை மடிப்பாக்கத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த லட்சுமி மற்றும் அவரது அண்ணன் மகன் ராஜேந்திரன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இதனையடுத்து உடனடியாக அந்த பகுதிக்கு சென்ற மீட்பு படையினர் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து அதன்பின் மின்கம்பியை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோக சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்