27 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் : தமிழக அரசு உத்தரவு
வியாழன், 16 ஜூன் 2016 (21:06 IST)
தமிழகத்தின் 27 ஐ.ஏ.எஸ் அதிகாரிளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆறாவது முறையாக ஜெயலலிதா பதவியேற்ற பின், பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். அமைச்சர்களுக்கு துறைகளை மாற்றியமைத்து வரும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும் பணியிட மாற்றம் செய்துள்ளார்.
அதன் விபரம் பின் வருமாறு :
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத் தலைவர் -சம்பு கலோலிகர்
பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் - எஸ்.கே.பிரபாகரன்
தமிழக மருத்துவ பணிகள் கழகத் தலைவர் - ஆபூர்வா
தமிழகத்தின் எரிசக்தி முகமை மேலாண் இயக்குர்- ஜக்மோகன் சிங் ராஜூ
எரிசக்தி துறை கூடுதல் தலைமைச் செயலாளர்- என்.எஸ்.பழனியப்பன்
தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை செயலாளர்- அமுதா
தமிழ்நாடு உப்பு கழக மேலாண் இயக்குநர்- உதயசந்திரன்
நிதித்துறை செலவின செயலாளர்- உமாநாத்
வளர்ச்சி கழக செயலாளர்- வெங்கடேசன்
பிற்பட்டோர் நலத்துறை செயலாளர்- ஏ.கார்த்திக்
சிறுகுறு நடுத்தர தொழில்கள் துறைச் செயலாளர் - மங்கத்ராம் சர்மா
தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் தகவல்துறை செயலாளர்-வெங்கடேசன்
நிதித்துறை செலவினப்பிரிவு செயலாளர்-உமாநாத்
இண்டிகோ சர்வ தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர்- அம்புஜ் சர்மா
வணிகவரித் துறை கூடுதல் ஆணையர்- சந்திரமவுலி
மாற்றுதிறனாளிகள் நலத்துறை ஆணையர்- நஜிமுதீன்
தமிழ் இணைய அகடாமியின் செயலாளர்- ராமச்சந்திரன்
வீட்டுவசதித்துறை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவுக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டு, சென்னைப் பெருநகர வளர்ச்சி ஆணைய உறுப்பினர் செயலாளராகவும் அவர் செயல்படுவார்.
அதேபோல், சி.காம்ராஜ், தமிழகத்தின் சிமெண்ட் நிறுவன, மேலாண் இயக்குநர் பதவியிலேயே தொடருவார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.