இறங்குங்கடா!.. விஜய் ரசிகர்களை காலில் மிதித்த பவுன்சர்!.. ஷாக்கிங் வீடியோ!...

BALA

வெள்ளி, 10 ஏப்ரல் 2026 (13:24 IST)
தமிழகத்தில் வருகிற 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கும் நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பல ஊர்களுக்கும் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார்.
குறிப்பாக செல்லும் இடமெல்லாம் அவர் திமுகவை கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார்..

ஒருபக்கம், விஜய் செல்லும்போது அவரை அருகில் பார்க்க வேண்டும் என்பதற்காகவும், அவரை தொட்டுப் பார்க்கும் ஆசையிலும் தவெக தொண்டர்களும், விஜய் ரசிகர்களும் பைக்கில் அவரின் பிரச்சார வேனை பின்தொடர்கிறார்கள்.. இதில் பலரும் கீழே விழுந்து விபத்தும் நடக்கிறது.. ஆனால் அவர்கள் மாறவில்லை.. தஞ்சாவுரில் அப்படி ஒரு கல்லூரி மாணவர் கீழே விழுந்து மரணமடைந்தார்.

விஜயின் பிரச்சார வாகனத்தை பின் தொடர்ந்து வர வேண்டாம் என தவெக பலமுறை சொல்லியும் அவர்கள் கேட்பதில்லை. இந்நிலையில், விஜய் இன்று காரைக்குடிக்கு பிரச்சாரத்திற்காக சென்றார்.. அப்போது விஜய் ரசிகர்கள் அவரின் பிரசார வேனை பின் தொடர்ந்து சென்றனர். அதில், சிலர் ஆர்வக்கோளாறில் பிரச்சார வாகனத்தின் மீது ஏற முயற்சி செய்தார்கள்.

அப்போது விஜய் அருகில் இருந்த சில பவுன்சர்கள் ஷூ அணிந்த கால்களால் அவர்களின் கைகளை மிதித்தார்கள் இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. திமுகவினர் இதை பகிர்ந்து வழக்கம்போல் விஜயை திட்டி வருகிறார்கள். மாஸ்டர் பட இசை வெளியீட்டு விழாவின் போது விஜய் ரசிகர்களை போலீசார் தாக்கியது தொடர்பாக பேசிய விஜய் ‘என் ரசிகர்கள் மீது கை வைக்காதீர்கள்’ என பேசியிருந்தார். ஆனால், அவரின் பவுன்சர் கால் வைத்திருக்கிறார் என பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.


விஜய்யின் பிரச்சார வாகனத்தை பிடித்து தொங்கிய தொண்டர்களின் கையை காலால் மிதித்த பவுன்சர்.. பகீர் காட்சி!#Karaikudi #TVK #Vijay #Campaign #Bouncer #Viralvideo #2026Election #NewsTamil24x7 pic.twitter.com/S4Nbx8P4a9

— News Tamil 24x7 (@NewsTamilTV24x7) April 10, 2026

 
Video Courtesy to News Tamil

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்