ஜனநாயகன் லீக் வீடியோவில் சர்ச்சை சீன்!.. விஜய்க்கு வாக்குகள் கிடைக்குமா?...

BALA

வெள்ளி, 10 ஏப்ரல் 2026 (11:25 IST)
நடிகர் விஜய் அரசியலுக்கு சென்றுவிட்ட நிலையில் அவர் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் அவரின் கடைசி திரைப்படமாக பார்க்கப்படுகிறது.. ஜனநாயகன்தான் எனது கடைசி திரைப்படம்.. இனிமேல் அரசியல்தான் என விஜயும் பல மேடைகளில் தெளிவாக கூறிவிட்டார்.
தெலுங்கில் பாலையா நடித்து வெளியான பகவந்த் கேசரி படத்தை ரீமேக் செய்து இந்த படத்தை உருவாக்கினார். அதே நேரம் தமிழுக்கு ஏற்றவாறு பல மாற்றங்களை ஹெச்.வினோத் செய்திருந்தார். இந்த படத்தில் மமீதா பைஜூ, பூஜா ஹெக்டே, பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்..

படத்திற்கு தற்போது வரை சென்சார் சான்றிதழ் கொடுக்கப்படவில்லை.. எனவே படம் வெளியாகவில்லை.. தேர்தலுக்கு பின்னரே ஜனநாயகன் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில்தான், இந்த படத்தின் 5 நிமிடக் காட்சி நேற்று இணையத்தில் வெளியானது.. ஒருபக்கம் முழு படமும் இணையத்தில் வெளியாகி விட்டதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இது படக்குழுவினரை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

இந்நிலையில்தான், லீக்கான அந்த ஐந்து நிமிடம் காட்சியில் ஒரு சர்ச்சையான காட்சி இடம் பெற்றிருக்கிறது. இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஒருவர் சென்னையில் பல இடங்களிலும் குண்டு வைப்பது போல படத்தில் காட்சிகள் வருகிறது. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து எத்தனை நாளைக்கு இஸ்லாமியர்கள் குண்டு வைப்பது போல திரைப்படங்களில் காட்டுவார்கள்.. சிறுபான்மையினர் விஜய்க்கு ஓட்டு போடக்கூடாது என திமுகவினர் பதிவிட்டு வருகிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்