இனி சுழற்சி முறையில் வகுப்புகள் இல்லை: தமிழக அரசு அறிவிப்பு!

செவ்வாய், 14 டிசம்பர் 2021 (06:28 IST)
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கடந்த சில வாரங்களாக சுழற்சிமுறையில் வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில் ஜனவரி 3ஆம் தேதி முறை சுழற்சி முறையில் இனி வகுப்புகள் இல்லை என்றும் வழக்கமான வகுப்புகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த ஊரடங்கில் ஒரு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது
 
அதன்படி கடந்த சில மாதங்களாக உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு சுழற்சிமுறையில் வகுப்புகள் நடந்த நிலையில் இனிய ஆறாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சுழற்சிமுறையில் வகுப்புகள் இல்லை என்றும் அதே போல் அனைத்து கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்கள் சுழற்சி முறையில் வகுப்புகள் என்று இயல்பாக வழக்கம் போல் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்