மீண்டும் மின்வெட்டு - தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் திடீர் பழுது

திங்கள், 9 மே 2016 (04:42 IST)
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் திடீர் பழுது காரணமாக தமிழகத்தில் மின்தடை ஏற்பட வாய்ப்பு உள்ளது. 
 

 
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட 5 மின் உற்பத்தி இயந்திரங்கள் செயல்பட்டு வருகின்றன. 
 
இந்த நிலையில், 5ஆவது மின்சார உற்பத்தி இயந்திரத்தில்  திடீர் பழுது ஏற்பட்டது. இதனால், அதில் உள்ள கொதிகலன் குழாயில் துவாரம் விழுந்ததால் இயந்திரம் நிறுத்தப்பட்டது.
 
இதனையடுத்து, 210 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதை சரிசெய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
 
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி இயந்திரங்கள் அடிக்கடி பழுதடைந்து வருகிறது என்பது குறிப்பிடதக்கது.
 

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

 

வெப்துனியாவைப் படிக்கவும்