தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளராக உள்ள என்.பெரியசாமி கடந்த 30 வருடங்களாக மாவட்ட செயலாளராக உள்ளார். இவர் தூத்துக்குடி தொகுதி எம்எல்ஏ கீதா ஜீவனின் தந்தை. கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த என்.பெரியசாமி சென்னையில் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார்.