நாடே பரபரக்கும் வகையில் சசிகலா குடும்பத்தினை வளைத்து வளைத்து சோதனை செய்தது வருமான வரித்துறை. சசிகலாவுக்கு சொந்தமான இடங்கள், நிறுவனங்கள், தினகரன், திவாகரன், விவேக், டாக்டர் சிவகுமார், கிருஷ்ணபிரியா என சசிகலா குடும்ப்பத்தினர் யாரும் தப்பவில்லை இந்த அதிரடி ரெய்டுக்கு.
குடும்பத்தினர் மட்டுமல்லாமல் அவர்களது உறவினர்கள், உதவியாளர்கள், ஆதரவாளர்கள் என எல்லாரையும் தங்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தது வருமான வரித்துறை. ஐந்து நாட்கள் துருவி துருவி, அங்குலம் அங்குலமாக சோதனை செய்த வருமான வரித்துறை கட்டுக்கட்டாக ஆவணங்கள், சொத்துக்கள், பணம், தங்கம், வைரம் உள்ளிட்டவையை கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இதுகுறித்து கருத்துக்கூறிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழக தலைவர் ஈவிகேஸ் இளங்கோவன், தினகரனை கைது செய்து விசாரிக்க வேண்டும் எனவும் சசிகலாவை வெளியே கொண்டு வந்து விசாரிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.