இரட்டை இலை சின்னம் யாருக்கும் கிடைக்காது: டிடிவி தினகரன்

செவ்வாய், 24 ஜனவரி 2023 (11:08 IST)
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ் இபிஎஸ் என இரு அணிகளுக்குமே கிடைக்க வாய்ப்பு இல்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
 
 ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் இந்த தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.
 
காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட நிலையில் அதிமுகவின் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் பிரிவு வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் ஆகிய இரு அணிகளுக்கும் இரட்டை இலை சின்னம் கிடைக்காது என்று தெரிவித்துள்ளார். வரும் தேர்தலில் இரட்டை இலை சின்னம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்