தனிக்கட்சி தொடக்கமா? - தினகரன் பதில் என்ன?

செவ்வாய், 28 நவம்பர் 2017 (09:57 IST)
தனிக்கட்சி தொடங்குவது குறித்து டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.


 
இரட்டை இலை சின்னத்தை முதல்வர் எடப்பாடி அணிக்கு தேர்தல் ஆணையம் கொடுத்துவிட்டது. இது தினகரனுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
 
இதனால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேண்டிய சூழ்நிலையில் தினகரன் இருக்கிறார். அந்நிலையில், தினகரன் கட்சி தொடங்குவார் என செய்திகள் வெளியானது. ஆனால், இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை. மேலும், தினகரன் பக்கம் இருந்த 3 எம்.பிக்கள் நேற்று மாலை எடப்பாடி அணியில் இணைந்துவிட்டனர்.
 
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் தினகரன் கூறியதாவது:
 
தனிக்கட்சி தொடங்கும் எண்ணமில்லை. அதிமுகவே எங்கள் கட்சி. எங்கள் சார்பில் தனிக்கொடி பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. அதிமுக கொடியை நாங்களும் பயன்படுத்துவோம். தேர்தல் ஆணைய தீர்ப்பில் கட்சி, அலுவலகம், கொடி பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
 
ஆர்.கே.நகர் தேர்தலில் எங்களுக்கும் திமுகவிற்கும்தான் போட்டி. எந்த கட்சியினரிடமும் நாங்கள் ஆதரவு கேட்கப்போவதில்லை.
 
பயத்தின் காரணமாகவே 3 எம்.பிக்களும் என்னிடம் சொல்லிவிட்டுத்தான் எடப்பாடி அணிக்கு சென்றுள்ளனர். இரட்டை இலை தொடர்பாக இன்னும் 2 நாட்களில் நீதிமன்றம் செல்வோம்” என அவர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்