சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு பிறகு நேற்று விடுதலை செய்யப்பட்டார். தற்போது விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், சசிகலாவை பார்ப்பதற்காக பெங்களூரு சென்ற அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.
அப்போது அவர், கொரோனா வார்டில் இருப்பதால் சசிகலாவை பார்க்க முடியவில்லை. அவருடைய விடுதலை எங்களுக்கும், அமமுக தொண்டர்களுக்கும் பெரும் மகிழ்ச்சி. சசிகலாவின் உடல்நிலை நன்றாக உள்ளது. கொரோனா விதிமுறைப்படி அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சசிகலாவுக்கு இங்கு தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது. வேறு மருத்துவமனைக்கு மாற்றுவது, டிஸ்ஜார்ஜ் செய்வது என அடுத்த கட்ட முடிவுகள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி நடக்கும். டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டதும், அமோக வரவேற்புடன் சசிகலாவை சென்னைக்கு அழைத்து செல்ல இருக்கிறோம்.
தற்போது, அரசியல் குறித்து பேச விரும்பவில்லை. இருப்பினும், உண்மையான அதிமுகவை மீட்கும் முயற்சியே எங்கள் தாரக மந்திரமாக இருக்கும். அதில் இருந்து பின்வாங்க போவதில்லை என தெரிவித்துள்ளார்.