மூடப்பட்ட 3000 டாஸ்மக் கடைகள். பொங்கல் வைத்து கொண்டாடிய பெண்கள்

திங்கள், 3 ஏப்ரல் 2017 (05:18 IST)
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் அருகில் உள்ள மதுக்கடைகள் அகற்ற வேண்டும் என சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் வழங்கிய அதிரடி தீர்ப்பு காரணமாக தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்த 3325 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இந்த தீர்ப்பு பொதுமக்களுக்கு மகிழ்ச்சியாகவும், மது பிரியர்களுக்கு அதிர்ச்சியாகவும் இருந்தன.



 


இந்த தீர்ப்புக்கு முக்கிய காரணமாக இருந்தவர் பாமகவை சேர்ந்த கே.பாலு. எனவே பாமகவினர் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் திருநெல்வேலியில் மூடப்பட்ட மதுக்கடையின் முன்பு அப்பகுதி மக்கள் பொங்கல் வைத்து கொண்டாடியுள்ளனர். இதேபோல் நாட்டின் பல நகரங்களிலும் பெண்கள் இந்த தீர்ப்பை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கத்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்