டாக்டர். ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி ஆளும் அதிமுகவுடன் கூட்டணி வைப்பது என முடிவு செய்துள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் இரு கட்சிகளுமே கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன. இந்த கூட்டணியில் பாஜகவும் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக அதிமுகவை ஊழல் கட்சி என கடுமையாக விமர்சித்துவந்த ராமதாஸ், இனி அதிமுக, திமுகவுடன் கூட்டடணி இல்லவே இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.