சென்னையில் 8 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து பாதிப்பு.. கிண்டியில் மூழ்கிய கார்.. மீட்புப்பணிகள் தீவிரம்

திங்கள், 19 ஜூன் 2023 (10:19 IST)
சென்னையில் நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக எட்டு இடங்களில் மரங்கள் விழுந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சென்னை கிண்டி கத்திப்பாரா பாலத்தின் அடியில் கார் ஒன்று மழை நீரில் சிக்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
சென்னை உள்பட தமிழகத்தின் வட மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கன மழை பெய்து வருகிறது என்பதும் இதனால் ஆறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது என்பதையும் பார்த்தோம். 
 
குறிப்பாக சென்னையின் பல பகுதிகளில் மரங்கள் முறிந்து சாலைகளில் விழுந்து உள்ள நிலையில் போக்குவரத்து ஸ்தம்பித்து உள்ளது. இதுவரை வந்த தகவலின்படி சென்னையில் எட்டு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 
 
செம்பியம், கொளத்தூர், தலைமைச் செயலகம், மைலாப்பூர், கிண்டி, தி.நகர் உள்ளிட்ட இடங்களில் சாலையில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். 
 
அதேபோல் சென்னை கிண்டி கத்திப்பாரா பாலத்தின் கீழ் தேங்கியுள்ள மழை நீரில் கார் ஒன்று சிக்கி உள்ளதை அடுத்து அந்த காரை மீட்கும் பணியும் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்