தம்பிதுரையை அரை மணி நேரம் காக்க வைத்த விஜயபாஸ்கர்

சனி, 17 மார்ச் 2018 (17:07 IST)
இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம், வேளாண் அறிவியல் மையம் சார்பில், கரூரில் வேளாண் அறிவியல் மையங்களுக்கான தேசிய அளவிலான கருத்தரங்கம் மற்றும் பயிர் இரகங்களுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும் மற்றும் 25 புதிய வேளாண் அறிவியல் மையங்களுக்கான அடிக்கல் நடுதல் மற்றும் விவசாயிகளுக்கான உரை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை, நிகழ்ச்சிக்கு சரியாக நேரப்படி 10 மணிக்கே வருகை தந்தார். ஆனால், மேடையில் தன்னந்தனியாக மட்டும் சுமார் அரை மணி நேரம் காத்திருந்த மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை, காத்திருக்கும் செய்தியை அறிந்து பின்னர் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மேடைக்கு ஒடி வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மேலும், மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை அதிகாரிகளுக்கும், அ.தி.மு.க வினருக்கும் இனக்கமாக பழகி வரும் நிலையில், தற்போது, அவரையே காக்க வைத்த சம்பவம், அ.தி.மு.க வினரிடையே மட்டுமில்லாமல், அரசு துறை அதிகாரிகளிடம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

கரூர் சி.ஆனந்தகுமார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்