கஸ்தூரி வீட்டை நோக்கி திருநங்கைகள் படையெடுப்பு!

சனி, 16 ஜூன் 2018 (15:20 IST)
18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை திருநங்கைகளோடு நடிகை கஸ்தூரி ஒப்பிட்டு தெரித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில்ன் கஸ்தூரி வீட்டு முன் திருநங்கைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 
பெரிது எதிர்பார்க்கபப்ட்ட 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லும் என தீர்ப்பு வழங்கினார். ஆனால், நீதிபதி சுந்தர் வழங்கிய தீர்ப்பில், சபாநாயகரின் உத்தரவு செல்லாது என தீர்ப்பு வழங்கினார்.    இதனால், 3வதாக ஒரு நீதிபதி நியமிக்கப்பட்டு அவர் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த நடிகை கஸ்தூரி “அரசியல் ரீதியாக இது தவறான நகைச்சுவை.. இரு வேறுபட்டு தீர்ப்பு சொல்லிட்டாங்களாமே! 18ஐ பிரித்து ஆளுக்கு ஒம்போதா? ஆஆங்! எனக் குறிப்பிட்டு இரு அரவாணிகளின் புகைப்படங்களை இணைத்திருந்தார். 
 
இதைக்கண்ட பலரும் அவருக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். எனவே, அந்தப் புகைப்படத்தை முதல் நீக்கிய கஸ்தூரி, கொஞ்சம் நேரம் கழித்து பதிவையும் நீக்கிவிட்டார். மேலும், இது போன்ற குறும்பும் தெனாவட்டும் கலந்த கமெண்டுகளை அடிக்க கண்டிப்பாக எனக்கு இந்த இடம் உகந்ததல்ல என்று புரிந்தது. இங்கு பகடி செய்வதில் கூட பாகுபாடு உள்ளது. சிலரை மட்டுமே அடிக்கலாம். யார் மனதையும் புண்படுத்தியிருந்தால் மனதில் ஆழத்தில் இருந்து மன்னிக்கவேண்டுகிறேன்” என பதிவிட்டார்.
 
இந்நிலையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள கஸ்தூரி வீட்டை நோக்கி திருநங்கைகள் போராட்டம் நடத்த முயன்றனர். ஆனால் காவல்துறையினர் அவர்களை செல்லும் வழியிலே தடுத்துவிட்டனர். பிரபல நடிகை இவ்வாறு பதிவிட்டது எங்களை கொச்சப்படுத்தும் விதத்தில் உள்ளது என்று போராட்டத்தில் ஈடுபட்ட திருநங்கைகள் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்