மதுரையில் திலகர் திடல் காவல் நிலைய சரகத்தில் போலிஸார் ரோந்து சென்ற போது அங்கு தனியாக நின்று கொண்டிருந்த திருநங்கையை பார்த்து விசாரித்துள்ளனர். அப்போது அவர் தான் மருத்துவப் படிப்பை முடித்துள்ளதாகக் கூறியுள்ளார். ஆனால் அதை காவலர்கள் நம்பவில்லை. இதையடுத்து அவரை காவல் ஆய்வாளர் கவிதா விடம் அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு அவர் தன் தோழியின் மூலமாக தனது சான்றிதழ்களை கொண்டு வந்து காட்டியுள்ளார். இதையடுத்து தான் மருத்துவப் படிப்பை முடித்திருந்தாலும் சமூகத்தில் திருநங்கைகளுக்கு அங்கிகாரம் இல்லாததால் அந்த தொழிலை தொடர முடியாமல் இப்படி பிச்சை எடுப்பதாக சொல்லியுள்ளார். இதையடுத்து அவருக்கு காவல் ஆய்வாளர் கவிதா உயரதிகாரிகளின் உதவியுடன் கிளினிக் அமைத்துக்கொடுத்துள்ளார்.