ஆனால் என்ன காரணத்தினாலோ திடீரென்று அதற்கு எந்த எந்த முக்கியத்துவமும் தராமல் இருந்தார்.முன்னாள் முதல்வர் கருணாநிதி முதல்வராக இருந்த போது அவருடன் அரசியல் பிணக்கத்தை ஏற்படுத்திக்கொண்டவர், ஏனோ விஜயகாந்த் மற்றும் சரத்குமார் போல தன்னை தனித்து அடையாளப்படுத்திக்கொள்ள தவறிவிட்டார்.எதுகை மோனையாக தமிழ் மொழியில் சரளமாக பேசுவது கைவரப்பெற்றவருக்கு அரசியல் சற்று காலை வாரிவிட்டதெனலாம்.