சென்னையின் சுற்றுலா பகுதிகளில் முக்கியமான ஒன்று வண்டலூர் உயிரியல் பூங்கா. கடந்த 1985ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த பூங்கா 1490 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஏராளமான வன விலங்குகள், பறவைகள் ஆகியவை இருக்கும் இந்த பூங்காவை முழுவதுமாக சுற்றிப்பார்ப்பது என்பது மிகவும் கடினம். குறிப்பாக வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் நீண்ட தூரம் நடந்து சுற்றிப்பார்க்க சிரமப்பட்டு வந்தனர்.
இன்று வண்டலூர் உயிரியல் பூங்காவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, 'அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ரூபாய் 3 கோடி செலவில் 40 இருக்கைகள்கொண்ட நான்கு சிறிய தொடர்வண்டிகள் வாங்க ஒப்புதல் வழங்கினார். இதற்கான பணி விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றும் விரைவில் சுற்றுலா பயணிகள் இந்த பூங்காவை ரயிலிலேயே சுற்றிப்பார்க்கலாம் என்றும்ன் அவர் தெரிவித்தார்.