கிளாம்பாக்கத்தில் இருந்து இலவச மினி பேருந்துகள்: போக்குவரத்து துறை அறிவிப்பு..!

Siva

ஞாயிறு, 14 ஜனவரி 2024 (08:00 IST)
சென்னையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சமீபத்தில் திறக்கப்பட்ட நிலையில் இந்த பேருந்து நிலையத்திற்கு சென்னையின் மற்ற பகுதியில் இருந்து செல்பவர்கள் மிகவும் கடினமானதாக உணர்ந்தார்கள்.

சென்னையின் பல பகுதியிலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்வதற்கு போதுமான போக்குவரத்து வசதி இல்லை என பொதுமக்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர்.

மின்சார ரயில், மெட்ரோ ரயில் மற்றும் போதுமான பேருந்துகள் வசதி செய்தவுடன் இந்த பேருந்தை நிலையத்தை திறந்து இருக்கலாம் என்று பொதுமகக்ள் கருத்து கூறினர். எதிர்க்கட்சி தலைவர்களும் இந்த பேருந்து நிலையத்திற்கு செல்வதற்கு போதுமான வசதி இல்லை என விமர்சனம் செய்தனர்.

இந்த நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்து கிளாம்பாக்கம் செல்லும் பயணிகளின் வசதிக்காக மினி பேருந்துகள் விடப்பட்டுள்ளதாகவும் இந்த பேருந்துகள் இலவசமாக இயக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

பொங்கலை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் கிளாம்பாக்கத்திற்கு ஸ்பெஷல் மினி பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது பொது மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் இது பொங்கலுக்காக மட்டுமா அல்லது நிரந்தரமாக இலவச மினி பேருந்துகளை இயக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்