பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம்,மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர். பல ஹிட் படங்களைக் கொடுத்து முன்னணி நடிகராக உள்ளார். அவருக்கு ஏராளமான ரசிகர் வட்டாரம் உண்டு. பெண் ரசிகர்கள் அதிக அளவில் இருக்கிறார்கள்.
இந்நிலையில், ஜான் ஆபிரகாம் ஒரு பைக் சாகச பிரியர் என்பதால், அவரது, வீட்டில் உள்ள பைக் கலெக்சன்ஸ் பற்றி ஒரு வீடியோ எடுத்து அதை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.