தக்காளி விலை இன்று மீண்டும் உயர்வு.. தக்காளி தவிர மற்ற காய்கறிகளின் விலை சரிவு..!

புதன், 26 ஜூலை 2023 (11:42 IST)
தக்காளி விலை கடந்த சில வாரங்களாக உயர்ந்து கொண்டே இருக்கிறது என்பதும் 100 முதல் 150 ரூபாய் வரை ஒரு கிலோ தக்காளி விற்பனையாகிக் கொண்டிருக்கிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
வட மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்வதன் காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரதுக்கு குறைந்துள்ளதை அடுத்து தக்காளி விலை உயர்ந்ததுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் நேற்று ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய் என விற்பனையாகி வந்த நிலையில் இன்று 10 ரூபாய் அதிகரித்து 110 ரூபாய் என விற்பனை ஆகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
தக்காளி தொடர்ச்சியாக உயர்ந்து கொண்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தக்காளி விலையை குறைப்பதற்கு மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டு வருகிறது.  
 
இருப்பினும் இன்னும் சில மாதங்கள் தக்காளி விலை குறைய வாய்ப்பில்லை என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் அதே நேரத்தில் தக்காளி தவிர மற்ற காய்கறிகளின் விலை குறைந்து வருவதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்