தக்காளி விலை திடீர் உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி, பொதுமக்கள் அதிர்ச்சி!
புதன், 19 அக்டோபர் 2022 (14:47 IST)
தக்காளி விலை திடீரென உயர்ந்துள்ளதை அடுத்து தக்காளி விவசாயம் செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். ஆனால் அதே நேரத்தில் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்து வருவதையடுத்து செடியில் உள்ள தக்காளிகள் அழுகி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மார்க்கெட்டுக்கு வரும் தக்காளி வரத்து குறைந்துள்ளது
இதன் காரணமாக தக்காளி விலை அதிகரித்துள்ளது. தற்போது கிலோ ரூபாய் 40 முதல் 50 ரூபாய் வரை விற்பனையாகி வரும் நிலையில் வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
எனவே தக்காளி மகசூல் செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். ஆனால் தக்காளி இல்லாமல் எந்த சமையலும் செய்ய முடியாது என்பதால் தக்காளியை வாங்கும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது