கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்த நிலையில் மார்க்கெட்டுகளில் தக்காளி வரத்து குறைந்துள்ளது. சென்னை கோயம்பேட்டில் தினசரி ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் உட்பகுதிகளில் இருந்து 100 லாரிகளில் காய்கறி வரத்து இருந்த நிலையில் தற்போது 35 லாரிகளே வருவதாக கூறப்படுகிறது.
ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தால் தக்காளி வரத்து குறைந்துள்ள நிலையில் இன்று தக்காளி விலை அதிகபட்சமாக கிலோ ரூ.140 ஐ தொட்டுள்ளது. மற்ற காய்கறிகளும் கடந்த சில தினங்களில் வேகமாக விலை உயர்ந்த நிலையில் தற்போது மெல்ல விலை குறைந்து வருகிறது. எனினும் தக்காளி விலை உயர்வு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.