கொரோனா பீதி; தமிழகத்தில் 144: இன்று டோல் ஃப்ரீயா..??

செவ்வாய், 24 மார்ச் 2020 (12:21 IST)
உளுந்தூர்பேட்டை சுங்கச் சாவடியில் கட்டணம் வசூலிக்கப்படமால் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

 
நாடு முழுவதும் தீவிரமாக பரவி வரும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு இன்று மாலை 6 மணி முதல் 144 உத்தரவை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது. 144 செயல்பாட்டில் இருந்தாலும் மளிகை கடைகள், மருந்தகங்கள், உணவகங்கள் இயங்க தடையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இருப்பினும் 144 பிறப்பிக்கப்பட இருப்பதால் தலைநகரமான சென்னையிலிருந்து மக்கள் பலர் அவசர அவசரமாக சொந்த ஊர்களுக்கு கிளம்பியுள்ளனர். இதனால் நேற்று இரவு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் பெரும் மக்கள் நெரிசலாக காணப்பட்டது. ரயில்கள் செயல்பாட்டில் இல்லாததால் மக்கள் பெரிதும் பேருந்துகளையே நம்பியுள்ளனர்.
 
நேற்று இரவு மட்டும் சென்னையிலிருந்து 1.5 லட்சம் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். சாலை போக்குவரத்து அதிகம் பயன்படுத்தப்பட்டு வருவதால் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிப்பை, இன்று ஒரு நாள் நிறுத்த உத்தரவிடக் கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முறையீடு செய்யப்பட்டது.
 
இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்க இன்று ஒருநாள் விதிவிலக்கு வழங்குவது குறித்த தமிழக அரசு பரிசீலிக்க அறிவுறுத்தல் வழங்கியிருக்கிறது. 
 
ஆனால், ஏற்கனவே கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உளுந்தூர்பேட்டை சுங்கச் சாவடியில் கட்டணம் வசூலிக்கப்படமால் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்