தமிழகத்தில் 144: என்ன செய்யலாம்? என்ன செய்யகூடாது? தெரிஞ்சிகோங்க...

செவ்வாய், 24 மார்ச் 2020 (10:03 IST)
தமிழகத்தில் இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு செயல்ப்பாட்டிற்கு வருகிறது. 144-ன் போது என்ன செய்யலாம், என்ன செய்யகூடாது என தெரிந்துக்கொள்ளுங்கள்... 
 
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டியுள்ளது. பல லட்சம் மக்கள் உலகம் முழுவதும் பாதித்துள்ள நிலையில் இந்தியாவிலும் கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனால் நாடு முழுவதும் 30 மாநிலங்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 471லிருந்து 492 ஆக உயர்ந்துள்ளது. இதில் 451 பேர் இந்தியர்கள் எனவும்,  41 பேர் வெளிநாட்டினர் எனவும்  சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. 
எனவே, நிலையை கட்டுக்குள் கொண்டு வர 144 தடை உத்தரவு இன்று மாலை 6 மணியில் இருந்து ஏப்ரல் 1 ஆம் தேதி போடப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் மக்கள் கடைபிடிக்க வேண்டியவை என்னவென தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது... 
 
1. பால், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும். 
2. வங்கிகள், ஏ.டி.எம்.கள் வழக்கம்போல் செயல்படும்.
3. மருந்து உற்பத்தி, விநியோகம், மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட அனுமதி.
4. ஆம்புலன்ஸ், விமான நிலையம், மருத்துவமனை செல்லும் டாக்சி, இறுதிச்சடங்கு வாகனத்திற்கு அனுமதி.
5. ஓட்டல்களில் பார்சல் வாங்க அனுமதி உண்டு,  ஆனால் அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை.
6. அனைத்து கல்லூரி, வேலை வாய்ப்பு தேர்வுகள் ஒத்தி வைப்பு. 
7. டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன.
8. ஊழியர்களை அலுவலகம் அழைத்து செல்லவும், பின்னர் பணி முடிந்து வீட்டுக்கு அழைத்து செல்லவும் உதவும் பொதுபோக்குவரத்து வாகனங்கள் இயங்க அனுமதி.
9. அத்தியாவசிய சேவைகள், அரசு பணிகளுக்கு மட்டும் அரசு வாகனங்களை பயன்படுத்த அனுமதி.
10. கடந்த 16 ஆம் தேதிக்கு முன் திட்டமிடப்பட்ட திருமணங்கள் மட்டுமே அனுமதி. திருமண நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 30 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும்.
11. ஆவின் பால் விற்பனையாளர்கள், அம்மா உணவகங்கள் செயல்படும்.
12. அத்தியாவசிய கட்டிட பணிகளுக்கு மட்டும் அனுமதி.
13. ஐ.டி பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும்.
14. பொது போக்குவரத்து, ஆட்டோ, டாக்சி ஆகியவை இயங்காது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்