தை அமாவாசை தினத்தில் தங்கள் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்து, அவர்களின் ஆசியை பெறுவதற்காக பக்தர்கள் வழிபடுகிறார்கள். தை அமாவாசை தினம் மிகவும் புண்ணிய தினமாக கருதப்படும் நிலையில் இந்த தினத்தில் பக்தர்கள் கங்கை, யமுனை, காவிரி போன்ற புனித நதிகளில் நீராடி தர்ப்பணம் செய்கிறார்கள்.
அதேபோல் தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரம், திருச்செந்தூர், கன்னியாகுமரி போன்ற தலங்களிலும் பக்தர்கள் தர்ப்பணம் செய்து வருகிறார்கள். பல கோயில்களில் தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.