ராகுல் காந்தி, செந்தில் பாலாஜி.. இன்று உச்சநீதிமன்றத்தில் 2 முக்கிய வழக்குகள் விசாரணை..!

வெள்ளி, 21 ஜூலை 2023 (07:36 IST)
ராகுல் காந்தி மற்றும் செந்தில் பாலாஜி ஆகிய இருவரின் முக்கிய வழக்குகள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது. 
 
அவதூறு வழக்கில் ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. குஜராத் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவை இரண்டு பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு விசாரணை செய்கிறது. 
 
அதேபோல் அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை கைது செய்தது சரி என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜி மனைவி மேகலாவின் ஆட்கொணர்வு மேல்முறையீட்டு மனு என்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது 
 
இந்த இரண்டு வழக்குகளும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்