இன்று 100வது நாள்: பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!

சனி, 12 பிப்ரவரி 2022 (07:28 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த 99 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பதை ஏற்கனவே பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்று நூறாவது நாளாகவும் பெட்ரோல், மற்றும் டீசல் விலை உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்ற அறிவிப்பு மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும் இன்னும் ஒரு சில நாட்களில் ஐந்து மாநில தேர்தல் முடிவடைந்தவுடன் கணிசமாக பெட்ரோல் டீசல் விலை உயரும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்