ஒரே நாளில் ரூ.192 உயர்ந்த தங்கம் விலை: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

வியாழன், 7 அக்டோபர் 2021 (09:32 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று திடீரென தங்கம் விலை உயர்ந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 24 ரூபாய் உயர்ந்து ரூபாய் 4411.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 192 குறைந்து  ரூபாய் 35288.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 4775.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 38200.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 60 காசுகள் உயர்ந்து ரூபாய் 65.20 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 65200.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்