ஓ.பி.எஸ். ஆட்சியா? பழனிச்சாமி ஆட்சியா? சனிக்கிழமை சட்டப்பேரவையில் முடிவு

வியாழன், 16 பிப்ரவரி 2017 (19:37 IST)
பெரும்பான்மையை நீருபிக்க 15 நாட்கள் அவகாசம் கொடுத்த நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த நாளை மறுப்பு சட்டப்பேரவை கூடுகிறது.


 


 
இன்று ஆளுநர் எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்து அவரது எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்தை ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் ஓபிஎஸ் அணி தங்கள் பெரும்பான்மையை 15 நாட்களில் சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கவும் ஆளுநர் உத்தரவிட்டு இருந்தார்.
 
அதன்படி எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்றார். இந்நிலையில் பிப்ரவரி 8ஆம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது. புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் நாளை மறு தினமே சட்டப்பேரவை கூடுகிறது. இந்த சிறப்பு கூட்டத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
இதில் ஓ.பி.எஸ். அணி பெரும்பான்மைய நீருபித்து வெற்றிப்பெறுமா? அல்லது எடப்பாடி பழனிச்சாம்மி தலைமையில் ஆட்சி அமையுமா? என்ற பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்