தீபாவளி: அரசு பேருந்துகளில் முன்பதிவு தொடங்கியது

புதன், 7 அக்டோபர் 2015 (05:57 IST)
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு பேருந்துகளில் முன்பதிவு தொடங்கியது.
 

 
தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகையான தீபாவளி பண்டிகை நவம்பர் 10 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
 
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு,  சென்னை, பெங்களூரூ மற்றும் முக்கிய ஊர்களில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல மிகவும் ஆர்வமாக உள்ளனர். இதற்காக, ரயில் மற்றும் பேருந்துகளில் முன்பதிவு செய்து வருகின்றனர். தற்போது அனைத்து ரயில்களிலும் அனைத்து வகுப்புகளுக்கும் முன்பதிவு முடிந்துவிட்டது.
 
இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளுக்கு முன்பதிவு தொடங்கியுள்ளது. தமிழக அரசு பேருந்துகளுக்கு 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதி தற்போது நடைமுறையில் உள்ளது.
 
இதனால், நமது அலுவலகம் அல்லது வீட்டில் இருந்தபடியே www.tnstc.in என்ற இணையதளம் மூலம் அரசு பேருந்து டிக்கெட்டினை எளிமையாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.
 
தீபாவளி பண்டிகையின் போது, சென்னையில் இருந்து சுமார் 1300 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகளை இயக்க தமிழக அரசு தயராகி வருகிறது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்