10 கி.மீட்டருக்கும் மேல் இருந்தால் புதிய பொது தேர்வு மையங்கள்: தமிழக அரசு அறிவிப்பு..!

Mahendran

புதன், 3 செப்டம்பர் 2025 (20:49 IST)
தமிழ்நாட்டில் 10 கி.மீட்டருக்கும் மேல் பயணம் செய்து பொது தேர்வெழுதும் மாணவர்களின் சிரமத்தை குறைக்க, புதிய தேர்வு மையங்களை அமைக்க அரசு தேர்வுகள் துறை இயக்குநர் சசிகலா உத்தரவிட்டுள்ளார். அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் இது குறித்த அறிவுறுத்தல்கள் அனுப்பப்பட்டுள்ளன.
 
+2 தேர்வு செல்லும் மாணவர்களுக்காக, அவர்கள் வசிக்கும் இடத்திலிருந்து 10 கி.மீட்டருக்குள் புதிய தேர்வு மையங்கள் அமைப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
 
புதிய தேர்வு மையங்களுக்கான பரிந்துரை அறிக்கையை வரும் 15ஆம் தேதிக்குள் நேரடியாக தேர்வுத்துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
இந்த நடவடிக்கையின் மூலம், தேர்வுக்கு செல்லும் மாணவர்களின் பயண தூரம் குறைவதோடு, நேரத்தையும் மிச்சப்படுத்த முடியும்.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்