TNPSC குரூப் 4 தேர்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.. இணையதள விவரங்கள்..!

Siva

புதன், 28 பிப்ரவரி 2024 (12:10 IST)
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி என்று விண்ணப்பதாரர்களுக்கு ஞாபகப்படுத்தப்படுகிறது.

6244 பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க சமீபத்தில் அறிவிப்பு வந்த நிலையில் பிப்ரவரி 28ஆம் தேதி அதாவது இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரியில் இன்று நள்ளிரவு 12 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் இந்த பணிக்கான தேர்வு வரும் ஜூன் 9ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும் மார்ச் 4ஆம் தேதி முதல் 6ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தில் திருத்தங்களை செய்யலாம் என்றும் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது

எனவே இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவார்கள் இன்று இரவுக்குள் ஆன்லைன் மூலம் உடனடியாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்