டிஎன்பிஎஸ்சி தேர்வு மையங்கள் குறைப்பு: நெல்லை, வேலூரில் தேர்வு எழுத முடியாது!

வெள்ளி, 14 அக்டோபர் 2022 (13:55 IST)
டிஎன்பிஎஸ்சி தேர்வு மையங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
டிஎன்பிஎஸ்சி தேர்வு மையங்கள் தமிழகத்தில் பல முக்கிய நகரங்களில் இருந்த நிலையில் தற்போது சில நகரங்கள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன
 
குறிப்பாக வேலூர், நெல்லை, சேலம் ஆகிய மையங்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், இனி அந்த மையங்களில் டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைபெறாது என்றும் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது 
 
சென்னை மதுரை கோவை திருச்சி ஆகிய நான்கு மையங்களில் மட்டுமே டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 5ஆம் தேதி சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமை துறை அடங்கிய உதவி இயக்குனர் பதவிக்கான தேர்வு மையங்கள் சென்னை மதுரை கோவை திருச்சி ஆகிய நான்கு மையங்களில் மட்டுமே தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதனால் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்