மின்சார வாரிய இழப்பு 3100 கோடி –அடுத்தடுத்த புயல்களால் சோகம் !

புதன், 26 டிசம்பர் 2018 (10:35 IST)
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வீசியப் புயல்களால் தமிழக் மின்சார வாரியம் ரூ. 3100 கோடி அளவிற்கு இழப்பைச் சந்தித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழகம் கடந்த சில ஆண்டுகளாக தானே, வர்தா, ஓகி, கஜா ஆகியப் புயல்களால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த புயல்களால் மக்கள், வீடு, கல்நடைகள், படகுகள் ஆகிய வாழ்வாதாரங்களை இழந்தனர். அரசிற்கோ வேறு வடிவில் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. ஒவ்வொரு  முறைப் புயல் வீசும் போதும் மின்கம்பங்கள் விழுந்து மின் இணைப்ப்புத் துண்டிக்கப்படுவதும் அதனை சரிசெய்ய மிகப்பெரியத் தொகையையும் ஊழியர்களின் நேரங்காலம் பார்க்காத உழைப்பையும் கொடுக்க வேண்டியுள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு கடலூரில் விசிய தானேப் புயலில் இருந்து தற்போது டெல்டாப் பகுதிகளில் வீசிய கஜாப் புயல் வரை மின்சார வரியத்திற்கு புதிய மின்கம்பம் நடுதல், மின்கம்பிகள் மாற்றம் ஆகியவற்றின் மூலம் இழப்பாக 3100 கோடி ரூபாய் ஆகியுள்ளதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இவ்வளவுப் பெரியத் தொகை இழப்பானதற்குக் காரணமாக மின்சாரம் இன்னும் கம்பிகள் மூலம் நிலத்திற்கு மேலே வழங்கப்படுவதுதான் காரணம் என்றும் . மின்சாரப் பங்கீட்டை தரைக்குக் கீழே அளிக்க வேண்டுமெனெவும் சமூக ஆர்வலர்கள் மற்றும் விஷயமறிந்தவர்கள் கூறுகின்றனர். ஆனால் அரசோ தனது மெத்தனப் போக்கால் மேலும் மேலும் தனக்கே நஷடத்தை ஏற்படுத்தி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்