பிளாஸ்டிக் ஒழிப்பு : தமிழக விளம்பர தூதராக விவேக் அறிவிப்பு

வியாழன், 23 ஆகஸ்ட் 2018 (12:15 IST)
தமிழகத்தில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஏற்படுத்தும் தமிழக விளம்பர தூதராக நடிகரும், சமூக ஆர்வலருமான விவேக் நியமிக்கப்பட்டுள்ளார்.

 
நடிகர் விவேக் ஏற்கனவே மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாமின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தின் பல இடங்கள் மரம் நடும் பணியை செய்து வருகிறார். தற்போது அவர் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ளும் தூதராக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கான அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை அறிவித்தார்.
 
பிளாஸ்டிக்குக்கு எதிரான விழிப்புணர்வு பரப்புரையில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி மற்றும் நடிகை ஜோதிகா ஆகியோர் ஈடுபடவுள்ளனர்.
 
இந்த நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி “தூய்மையான தமிழகத்தை உருவாக்க ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும்.  ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு பொதுமக்கள், வியாபாரிகள் ஒத்துழைப்பு தர வேண்டும். பிளாஸ்டிக்குக்கு பதில் மாற்று பொருட்களை மக்கள் பயன்படுத்த வேண்டும்” என தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்