சென்னையைச் சேர்ந்த ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் கடந்த 2002 ஆம் ஆண்டு சென்னை மந்தைவெளியில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டார். ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் புகாரின் பேரில் ஜெயேந்திரர், சுந்தரேச அய்யர் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை கைதும் செய்தனர்.
இந்த வழக்கு சென்னை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் 14 வருடங்களுக்குப் பிறகு, அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், அப்ரூவர் ஆக மாறிய ரவிசுப்பிரமணியன் மீதான வழக்கை தொடர்ந்து நடத்த நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.