தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை - தமிழக அரசு உறுதி

வியாழன், 14 செப்டம்பர் 2017 (15:35 IST)
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணி தொடங்கி விட்டதாக தமிழக அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.


 

 
ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், எடப்பாடி அரசு மெஜாரிட்டியை நிரூபிக்க கோரி தினகரன் தரப்பில் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 
 
அது தொடர்பான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, தினகரனை ஆதரிக்கும் 18 எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என  அரசு தலைமை வழக்கறிஞரிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். 
 
அதற்கான பதில் மனுவை அவர் மாலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீது நடவடுக்கை எடுக்க முடியாது என உறுதி அளிக்க முடியாது. சபாநாயகர் ஏற்கனவே அதற்கான் நடவடிக்கைகளில் இறங்கி விட்டார். சபாநாயகரின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என குறிப்பிட்டிருந்தார்.
 
அதே நேரத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என தினகரன் தரப்பு வழக்கறிஞர் வலியுறுத்தினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்