ஜெயலலிதா இறந்த பின்னர் தொடக்கத்தில் சசிகலாவை எதிர்த்த நாஞ்சில் சம்பத், உடனடியாக அந்தர் பல்டி அடித்து சசிகலாவை ஆதரித்து பேச ஆரம்பித்தார். அவர் சிறைக்கு சென்ற பின்னர் தினகரன் ஆதரவாளராக மாறினார் நாஞ்சில் சம்பத்.
தினகரன் மீது ஏகப்பட்ட புகார்கள், குற்றச்சாட்டுகள் வந்த போதும் அவர் தினகரனை உச்சத்தில் தூக்கி வைத்து புகழ்ந்து வந்தார். இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் உள்ள தினகரனை இன்று வரை புகழ்ந்து தள்ளி வருகிறார் நாஞ்சில் சம்பத்.
தினகரனை ஒதுக்கி வைப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் ஆலோசனை நடத்திய பின்னர் அமைச்சர்கள் அறிவித்தனர். அதன் பின்னரும் தினகரனுக்கு ஆதரவாக பேசி வருகிறார் நாஞ்சில் சம்பத். ஆனால் தினகரன் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத்துக்கு அரசு வீடு ஒன்றை எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு ஒதுக்கியுள்ளதாக தகவல் வருகிறது.