ஊரடங்கின்போது தடுப்பூசி போட பயணம் செய்யலாமா?

சனி, 8 மே 2021 (10:08 IST)
தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை இரண்டு வார முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பதும் இந்த முழு ஊரடங்கின்போது பேருந்துகள் கார்கள் ஆட்டோக்கள் இயங்க அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது
 
இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகி வரும் நிலையில் தடுப்பூசி போடுவதற்கு பயணம் செய்ய அனுமதி உண்டு என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஊரடங்கின்போது தடுப்பூசி போட மருத்துவமனைகளுக்கு வாகனங்களில் செல்ல எந்தவித தடையும் இல்லை என்றும் முழு ஊரடங்கு காலத்தில் தடுப்பூசி போட பொதுமக்கள் எந்த வித வாகனத்தில் செல்ல அனுமதிக்கப்படுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது 
 
ஆனால் அதே நேரத்தில் தடுப்பூசி போடுவதாக சொல்லிக்கொண்டு வேறு இடத்திற்கு செல்வது தெரிந்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா காலத்தில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள அனைவரும் ஊரடங்காக இருந்தாலும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்